மகளிர் உரிமைத் தொகை: புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் - இந்த விதிமுறைகள் கட்டாயம்

M K Stalin Tamil nadu Budget 2025
By Vidhya Senthil Mar 15, 2025 03:51 AM GMT
Report

2025–2026ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை

மகளிர் உரிமைத் தொகை: புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் - இந்த விதிமுறைகள் கட்டாயம் | New Applications For Magalir Urimai Thogai

 1. மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் எண், பயோமெட்ரிக் அல்லது ஒரு முறை கடவுச்சொல் (OTP) தரவை ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புக்காக வழங்க வேண்டும்.

2. விண்ணப்பதாரரின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

3. விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களாக மற்றும் வருமான வரி செலுத்துபவர்களாக இருக்கக் கூடாது. அதேபோல் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோராக இருக்க கூடாது.

4. விண்ணப்பதாரரின் குடும்பத்தில் மாநில, மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருக்க கூடாது.

5. விண்ணப்பதாரரின் குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தவிர) இருக்க கூடாது.

6. விண்ணப்பதாரரின் குடும்பத்தில் யாரும் சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்க கூடாது.

மகளிர் உரிமைத் தொகை: புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் - இந்த விதிமுறைகள் கட்டாயம் | New Applications For Magalir Urimai Thogai

7. விண்ணப்பதாரரின் குடும்பத்தில் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து (Annual turnover) சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் யாரும் இருக்க கூடாது.

8. விண்ணப்பதாரரின் குடும்பத்தில் முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இருக்க கூடாது.

9. விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட்டாக 5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் இருக்க கூடாது.