புதிய விமான நிலையம், நிலம் வழங்குபவர்களுக்கு பாதிப்பு வராது : அமைச்சர் உறுதி
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு நிலம் வழங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.
புதிய விமான நிலையம்
சென்னைக்கு மற்றொரு விமான நிலையம் வருவது குறித்து பிரபல தொலைகாட்சி செய்தி சேனலுக்கு பேட்டியளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

சென்னைக்கு பன்னாட்டு விமான முனையம் தேவை என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், தற்போது பிரம்மாண்ட வசதிகளுடனான விமான நிலையம் தேவை என்ற கனவு நிறைவேறியிருக்கிறது என்றார்.
பாதிப்பு வராது
அதே சமயம் , நிலத்தை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் பாதித்துவிடாமல் நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடுகளை வழங்கி, பாதுகாப்புகளை வழங்கி நிலம் கையகப்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.