வந்தாச்சு..சென்னையில் தாழ்தளப் பேருந்து சேவை- இதில் இவ்வளவு சிறப்பம்சங்களா?
சென்னையில் புதிதாக 100 தாழ்தளப் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
தாழ்தளப் பேருந்து
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 100 புதிய தாழ்தளப் பேருந்துகளின் இயக்கத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ரூ.66.15 கோடி மதிப்பிலான 58 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள், 30 சாதாரண BS-VI பேருந்துகள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகளின் சேவைகள் துவங்கியுள்ளது.
இந்த புதிய பேருந்துகள் பிராட்வே - கிளாம்பாக்கம், கோயம்பேடு, ஆவடி, பூந்தமல்லி, ரெட் ஹில்ஸ், திருப்போரூர், திருவெற்றியூர், தியாகராய நகர் என பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளுக்கு நீல நிற வண்ணத்தில் உள்ளது.
இவை மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது. அதுமட்டுமின்றி, 75 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. தாழ்தளத்தின் உயரத்தை இடதுபுறத்தில் 60 மி.மீட்டர் அளவில் சாய்த்து மிக எளிதாக ஏறி,
சிறப்பம்சங்கள்
இறங்கும்படி kneeling வசதியும் உள்ளது.மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் சாய்தளம் வசதியும், வீல்சேருடன் அமர்ந்து பயணம் செய்ய தனி இடவசதியும் உள்ளது. தானியங்கி கதவுகள் மூடினால் மட்டுமே பேருந்தை நகர்த்த முடியும்.
பேருந்து நிறுத்தத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள ஒலி பெருக்கி மற்றும் காட்சி மூலம் தெரிவிக்கும் எல்இடி டிஸ்பிளே போர்டு பேருந்துகளுக்குள் பொருத்தப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட அகலமான குஷன் இருக்கைகள் மற்றும் இடவசதி அதிகரிப்பதற்காக பேருந்தின் நீளம் 12 மீட்டர் மற்றும் காற்றோட்ட வசதி அதிகரிக்க அகலமான ஜன்னல்கள் உள்ளது. ஓட்டுநர் பேருந்தை பின்நோக்கி இயக்க Rear view camera , ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், புதிய வடிவிலான டேஸ் போர்டு ஆகியவையும் உள்ளது.
பேருந்தின் முன்புறம் ஓட்டுநர் பார்வை மறைக்கும் இடத்தை கவனிக்க Blind Spot Mirror உள்ளன. மேலும், என்ஜினில் கூடுதல் வெப்பம் காரணமாக தீப்பற்றக் கூடிய சூழ்நிலை வந்தால், அணைப்பதற்கு சென்சாருடன்கூடிய Fire Safety Nozzle Engine மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் மக்கள் பயணம் மேற்கொள்ள மாநகரப் பேருந்துகளே முக்கிய பங்காற்றி வருகின்றன. மக்கள் சிரமமின்றி பயணித்திட ஏதுவாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி போக்குவரத்துத்துறை சார்பில் கூடுதல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
— Udhay (@Udhaystalin) August 4, 2024
அந்த வகையில், மாநகரப்… pic.twitter.com/uKdlVCDYpU