ஓடிடியில் வெளியானது நயன்தாராவின் நெற்றிக்கண் - ரசிகர்கள் உற்சாகம்

released movie fans enjoy netrikkan
By Anupriyamkumaresan Aug 13, 2021 08:28 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in திரைப்படம்
Report

நயன்தாரா நடிப்பில் இயக்கப்பட்ட நெற்றிக்கண் திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியானது. கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ், நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வை குறைபாடு இருந்தாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக்களம்.

ஓடிடியில் வெளியானது நயன்தாராவின் நெற்றிக்கண் - ரசிகர்கள் உற்சாகம் | Netrikkan Movie Released Today Fans Enjoy

‘நெற்றிக்கண்’திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியானது. இப்படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக அஜ்மல் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.