“இன்னைக்கு ரெடியா இருங்க”-நயன்தாரா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..

Actress Nayanthara Netrikann director vignesh shivan
By Petchi Avudaiappan Aug 04, 2021 06:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

  நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் டைட்டில் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் படம் “நெற்றிக்கண்”.இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். கடந்த ஜூலை 29 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டைட்டில் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதால் நயன்தாரா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.