நெற்றிக்கண் இன்று ரிலீஸ் - மகிழ்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள்

hotstar Netrikann Actressnayanthara
By Petchi Avudaiappan Aug 13, 2021 04:33 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in திரைப்படம்
Report

 நடிகை நயன்தாரா நடித்துள்ள ’நெற்றிக்கண்’ படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இயக்குநர் விக்னேஷ்சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் “நெற்றிக்கண்”. இப்படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

இப்படம் பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படம் இன்று மதியம் 12.15 மணிக்கு ஆன்லைன் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.