‘நெற்றிக்கண் என்றும் மூடாது’- வெளியானது டைட்டில் பாடல் - நயன்தாரா ரசிகர்கள் உற்சாகம்!
நயன்தாரா நடிப்பில் வெளியாகும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டைட்டில் டிராக் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகர் நயன்தாரா. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வந்த திரைப்படம் தான் நெற்றிக்கண்.
இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இப்படத்தினை அவள் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன், ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது, விக்னேஷ் சிவன் எழுத்தில் பூர்வி கௌட்டிவ் குரலில் இப்படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எப்போதும் மூடாது... எப்போதும் சாகாது... குற்றங்கள் தாங்காது! இது நயன்தாராவின் சுட்டெரிக்கும் நெற்றிக்கண்! விரைவில் #DisneyPlusHotstarMultiplex இல், First day, First show!
— Disney+ Hotstar (@DisneyPlusHS) August 5, 2021
Watch the song now: https://t.co/4kusFLI4X1