புனீத் ராஜ்குமாருக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி - வச்சு விளாசிய இணையவாசிகள்
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்துக்கு இணையவாசிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் இறந்த அன்று மருத்துவமனையில் இருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் புனீத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஹூட் ஆப்பில் பேசி அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ரஜினி. நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத்… என ரஜினி தெரிவித்துள்ளார்.
ஹூட் ஆப்பில் ரஜினி பேசியதை கேட்க வேண்டும் என்றால் அந்த ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதால் சமூக வலைதளவாசிகள் கடுப்பாகிவிட்டனர். அவர்கள் கூறியிருப்பதாவது, ஒரு உயிர் போனதை கூட ஹூட் ஆப் மூலம் தான் பேசுவீர்களா?. மகளின் செயலிக்கு விளம்பரம் தேட ஒரு அளவு இல்லையா சார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினி ரசிகர்களும் களத்தில் இறங்கியுள்ளதால் சமூகவலைத்தளங்களில் பல்வேறு விதமான விவாதங்கள் கிளம்பியுள்ளன.