தனுஷ் பாடியதிலேயே சிறந்த பாட்டு ...சந்தோஷ் நாராயணன் சொன்னது எதை தெரியுமா?

Jagame Thanthiram Actor Dhanush Nethu song Santhosh Narayanan
By Petchi Avudaiappan May 21, 2021 09:09 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 நடிகர் தனுஷ் பாடியதிலேயே சிறந்த பாட்டு இதுதான் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் "ஜகமே தந்திரம்". சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனுஷ் பாடியதிலேயே சிறந்த பாட்டு ...சந்தோஷ் நாராயணன் சொன்னது எதை தெரியுமா? | Nethu Song Is My Personal Favour Of Dhanush

இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான "நேத்து"வின் வீடியோ மே 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தான் தங்களது கூட்டணியில் தனுஷ் பாடிய சிறந்த பாடல் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் புகழ்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ் எழுதி பாடியுள்ள இந்த பாடல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு இணையத்தில் ட்ரெண்டிங்கிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.