நம்பிக்கை தரும் தமிழ்நாட்டின் தங்கம்: டோக்கியோ ஒலிம்பிக்கில் முன்னேற்றம்
டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பாய்மரப் படகுப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணன் சிறப்பாக ஆடி கவனம் ஈர்த்துள்ளார்.

இந்த போட்டியில் இந்தியா சார்பாக தேர்வு செய்யப்பட்ட 4 பேரில் நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன், கேசி கணபதி ஆகிய மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் ஒலிம்பிக்கிற்கு தேர்வாகும் இந்தியாவின் முதல் பாய்மரப் படகுப் போட்டி வீராங்கனை நேத்ரா குமணன்தான் என்பது கூடுதல் சிறப்பு. இதனிடையே நேத்ரா குமணன் கலந்த கண்ட பாய்மரப் படகுப் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த பாய்மரப் படகுப் போட்டி என்பது laser radial பிரிவாகும். மொத்தம் 10 ரேஸ் இதில் நடக்கும். தினமும் 2 ரேஸ் வீதம் இதில் போட்டிகள் நடக்கும். ஆகஸ்ட் 1ம் தேதி வெற்றியாளரை தேர்வு செய்யும் போட்டி நடக்கும். தொடக்கத்தில் 40 இடத்தில் இருந்த நேத்ரா பின் வேகமாக முன்னேறினார். மார்க் புள்ளிகளை வேகமாக தொட்டு ஒவ்வொரு சுற்றிலும் முன்னேறிக்கொண்டு வந்தார். முதல் ரேஸ் முடிவில் 33வது இடத்திற்கு முன்னேறினார்.

அதன்பின் இரண்டாவது ரேஸ் நடைபெற்றது. இதிலும் வேகமாக முன்னேறிய நேத்ரா கடைசியில் லேசாக பின்தங்கியதால் 16வது இடத்தை பிடித்தார்.
நேத்ராவின் ஆட்டம் இன்று சிறப்பாக இருந்ததால் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு நடைபெறும் போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan