ஒமைக்ரான் பரவல் எதிரொலி: நெதர்லாந்தில் மீண்டும் ஊரடங்கு

lockdown netherland omicronvirus covid2021
By Petchi Avudaiappan Dec 18, 2021 11:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சர்வதேசம்
Report

ஒமைக்ரான் பரவல் காரணமாக நெதர்லாந்தில் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் மற்ற நாடுகளுடனான போக்குவரத்து சேவைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. 

சில நாடுகளில் தற்போது முழு ஊரடங்கு, கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு ஆகியவை அமலாக தொடங்கியுள்ளது.அந்த வகையில் நெதர்லாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நம் நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நாம் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. எனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதாவது இன்று முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், உணவகங்கள், பார்கள், சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட வேண்டும். அதே நேரத்தில் பள்ளிகள் குறைந்தது ஜனவரி 9 ஆம் தேதி  வரை மூடப்பட வேண்டும்.  

கிறிஸ்துமஸ் தினத்தைத் தவிர மற்ற நாட்களில் மக்கள் தங்கள் வீட்டில் அனுமதிக்கப்படும் விருந்தினர்களின் எண்ணிக்கையும் நான்கில் இருந்து இரண்டாக குறைக்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.