நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்க்கு புதிய விதி முறைகளை கொண்டு வரவுள்ள : மத்திய அரசு
ஒடிடி தளங்களில் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பும் நிறுவனங்களுக்கு சுய கட்டுப்பாடு ஒழுங்குமுறை விதிகளை உருவாக்குவதில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த,'நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற நிறுவனங்கள், இணைய வசதி மூலம், திரைப்படம், டிவி தொடர்களை வழங்கி வருகின்றன. ஆனால்,இந்த நிறுவனங்கள் வெளியிடும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் ஆபாச காட்சிகள் இடம் பெறுவதாக, மத்திய அரசிடம் ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன.
எனவே, இது போன்ற மின்னணு தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்,நிறுவனங்களை ஒழுங்குபடுத்த, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம், விதிமுறைகளை உருவாக்கி வருகிறது.
அந்தஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றி புகார் தெரிவிக்கும் வகையில் புதிய சட்ட விதிமுறைகளை உருவாக்கும் பணியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.