’மேகி நூடுல்ஸ்' கேடானது: ஒப்புக் கொண்டது நெஸ்லே நிறுவனம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
நெஸ்லேவின் 2 நிமிடங்களில் தயாராகும், 'மேகி நுாடுல்ஸ்' உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை, அதை தயாரிக்கும் 'நெஸ்லே' நிறுவனமே ஒப்புகொண்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும், தன் உற்பத்தி மையங்களை அமைத்துள்ள 'நெஸ்லே' நிறுவனம், அதன் உணவு பொருட்களின் தரம் தொடர்பான சர்ச்சையில், அடிக்கடி சிக்கி வருகிறது.

இருப்பினும், அந்நிறுவன தயாரிப்பான இரண்டு நிமிடங்களில் தயாராகும் 'மேகி நுாடுல்ஸ்', உலகம் முழுதும் சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியோராலும் விரும்பி உண்ணப் படுகிறது.
இதற்கிடையே, அந்நிறுவனம் தயாரிக்கும் உணவு பொருட்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை, அதன் அதிகாரிகள் சமீபத்தில் சமர்ப்பித்து உள்ளனர்.
அதில், அந்நிறுவனம் தயாரிக்கும் மேகி நுாடுல்ஸ், ஐஸ்கிரீம் உட்பட, 60 சதவீத உணவு பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என குறிப்பிடப்பட்டதால் பெரும்பாலானோர் அதிர்ச்சியில் உறைந்தனர்

மேலும், தன் தயாரிப்புகளில், ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும், உடல்நிலை தொடர்பான விஷயம் என்பதால், அவற்றை ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், நெஸ்லே கூறி உள்ளது.
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil
அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு IBC Tamil
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil