பஞ்சாப் அணியில் கழட்டி விடப்படுகிறாரா கேப்டன் கே.எல்.ராகுல் - உண்மை நிலவரம் இதோ

KLRahul IPL2022 PunjabKings nesswadia
By Petchi Avudaiappan Oct 29, 2021 12:21 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிறுவனர் நெஸ் வாடியா, கேப்டன் கே.எல்.ராகுல் குறித்தும் பஞ்சாப் அணி வீரர்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளது. அதேசமயம் வீரர்களுக்கான மிகப்பெரிய ஏலமும் நடக்கவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம், எந்த வீரரை புதிதாக தனது அணியில் இணைக்கலாம், எந்த வீரரை நீக்கலாம் என்ற திட்டங்களை தீட்டி வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுல் தக்கவைக்கப்படுகிறாரா என்பது குறித்து அந்த அணியின் நிறுவனர் நெஸ் வாடியா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில கருத்துக்களை தெரிவித்தார். 

அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும் 2021 ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், முகமது ஷமி போன்ற வீரர்களைத் தவிர மற்ற யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. அதேசமயம் கே.எல்.ராகுல் தக்க வைக்கப்படுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

ஆனால் அவரை தவிர்த்து சில வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு தனி அந்தஸ்து இருக்கிறது. ஒரு வீரரை மட்டும் வைத்து கிரிக்கெட் விளையாட முடியாது கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால் 11 வீரர்கள் நிச்சயம் தேவை. மேலும் நாங்கள் எந்த வீரரை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று யோசித்து வருகிறோம்.ஐபிஎல் தொடரில் எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையோடு இருக்கிறோம் என்றும் நெஸ் வாடியா தெரிவித்திருந்தார்.