போராட்டத்தின் எதிரொலியாக நேபாள பிரதமர் ஒலி ராஜினாமா - துபாய் தப்பி செல்கிறாரா?
சமூகவலைத்தளங்கள் மீதான தடைக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக நேபாள பிரதமர் ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேபாளத்தில் வெடித்த போராட்டம்
நேபாளத்தில் பதிவு செய்யப்படாத 26 சமூகவலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கூறி, நாடு முழுவதிலும் இளம் தலைமுறையினர் போராட்டத்தில் இறங்கினர்.
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை நேற்று நடத்திய துப்பாக்கிசூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
போராட்டம் நாடு முழுவதும் அதிகரித்த நிலையில், சமூகவலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டது.
பிரதமர் ஒலி பதவி விலகல்
போராட்டதிற்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் ரமேஷ் லோகாக் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இருந்தாலும், போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடாமல், பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலக வேண்டுமென போராட்டை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, பிரதமர் ஒலியின் வீடு போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கே.பி. சர்மா ஒலி அறிவித்துள்ளார்.
மேலும், அவர் விமானம் மூலம் துபாய்க்கு தப்பி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |