வெளிநாட்டு குழுவின் உதவியை ஏற்க நேபாள முடிவு

Nepal Flood
By Fathima Aug 29, 2026 04:36 AM GMT
Report

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ளது.

இமயமலை பகுதியில் பனிப்பாறை சரிந்து நதியில் விழுந்ததில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரசுவா மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

திடீர் வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன.

வெளிநாட்டு குழுவின் உதவியை ஏற்க நேபாள முடிவு | Nepal Govt Permission To Foreign Rescue Teams

இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது, 1500 பேர் காணாமல் போயுள்ளனர்.

நேபாள ராணுவம், மீட்புப்படையினர் இணைந்து மீட்புபணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் வெளிநாட்டு உதவி வேண்டாம் என அரசு அறிவித்தது.

மேலும் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால் தானே மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் எனவும் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது அதனை மாற்றி உதவியை ஏற்க முன்வந்துள்ளது. இதனை தொடர்ந்து வெளிநாட்டு மீட்புக்குழுக்கள் மற்றும் அதில் அனுபவமிக்க நிபுணர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் படி, குறைந்தது 320 இந்தியர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.