நேபாள வெள்ளம்: சடலங்களில் நகைகளை திருடும் கும்பல்

Nepal Flood
By Fathima Aug 28, 2026 06:54 AM GMT
Report

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடி அவர்களின் நகைகளை ஒரு கும்பல் திருடுவதாக வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

நேபாள இயற்கை பேரிடர் வெள்ளத்தில் சிக்கி இதுவரையிலும் 469 பேர் பலியாகியுள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காணவில்லை, மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த பல்லாண்டுகளில் நேபாளம் காணாத மிக மோசமான இயற்கை பேரிடராக இது அமைந்துள்ளது.

நேபாள வெள்ளம்: சடலங்களில் நகைகளை திருடும் கும்பல் | Nepal Floods Gang Steals Jewelry

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் போன்ற மாவட்டங்களில் மீட்புபணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் சடலங்களை தோண்டி எடுத்து அவர்களின் நகைகளை கும்பலொன்று திருடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் பெயர் உமேஷ், மதன் என்பதும் அவர்களை கைது செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.