Nepal Flood: பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு

Nepal Flood
By Fathima Aug 28, 2026 05:11 AM GMT
Report

நேபாள பெருவெள்ளம் தொடர்பில் பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 469 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கி.மீ வடக்கே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன, சாலைகள் பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன.

பனிப்பாறை உடைந்து பனிச்சரிவு ஏற்பட்டதே வெள்ளத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த இயற்கை பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர், இவர்களில் இதுவரை 469 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது, மேலும் 977 பேரை காணவில்லை, இவர்களில் 577 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

7250 நேபாள போலிசார், 4200 நேபாள ராணுவத்தினர் 1845 ஆயுத படை போலிசார் என மொத்தம் 13295 பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12