நேபாள விமான விபத்து - 71 பேர் உடல் மீட்பு - ஒருவரை தேடும் பணி தீவிரம்...!

Nepal Accident Flight
By Nandhini Jan 18, 2023 10:13 AM GMT
Report

நேபாள விமான விபத்து

கடந்த ஞாயிற்றுக்கிழமை நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு காலை எட்டி ஏர்லைன்ஸ்' விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர்.

விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது பழைய விமான நிலையத்துக்கும், புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேட்டி நதிக்கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது.

அந்த நேரத்தில் மோசமான வானிலையும் நிலவியது. தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விமான விபத்தில் 68 பேர் இறந்ததாக முதலில் தகவல்கள் வெளியானது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.

nepal-aircraft-crash-71-bodies-recovered

71 பேர் உடல் மீட்பு

விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது. விமானத் தரவுப் பதிவு கருவி, கருப்புப் பெட்டியை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் ராணுவம் ஒப்படைத்துள்ளது.

இந்நிலையில், நேபாள விமான விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 71 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது என்று நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.