பேரன் திருமணம்; 96 வயது தாத்தா செய்த செயல் - கவனம் ஈர்க்கும் வீடியோ

Viral Video Marriage Nepal
By Sumathi Apr 15, 2023 06:24 AM GMT
Report

பேரன் திருமணத்தில் தாத்தா நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

திருமண விழா

நேபாளத்தைச் சேர்ந்தவர் 96 வயது முதியவர். இவர் தனது பேரனின் திருமண விழாவில் கலந்துக் கொண்டார். அப்போது அங்கு அவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேரன் திருமணம்; 96 வயது தாத்தா செய்த செயல் - கவனம் ஈர்க்கும் வீடியோ | Nepal 96 Yrs Old Man Dance Grandson Marriage Viral

அதில் அவர் நேபாள இசைக்கு ஏற்றவாறு நடனமாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், “காதலையும், அன்பையும் கொண்டாடும் போது வயது என்பது வெறும் நம்பர் தான்! அந்த வகையில் 96 வயதான முதியவர் அவரது பேரனின் திருமணத்தில் நடமாடுவதை பாருங்கள்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதியவர் நடனம்

இந்த வீடியோ தற்போது 76 ஆயிரம் பார்வையாளர்களை கடந்து அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஹரியான்வி என்ற மூதாட்டி ஆடிய நடன வீடியோவும் வைரலானது.

அதில், இரண்டு கைகளாலும் அவர் கால்களைப் பிடித்துக்கொண்டு குட்டிக்கரணம் போடத் தொடங்குகிறார். விடாமல் திறமையை வெளிப்படுத்தியது வியக்க வைத்தது.