சிவகார்த்திகேயனை மேடையில் என்ன சொன்னார் தெரியுமா? ஆர்ஜே.பாலாஜி..!
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் ஆயுஷ்மான் குரானா என்ற “ஆர்டிக்கிள் 15” வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தமிழில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன்,ஷிவானி ராஜசேகர்,ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க,ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தை திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் அன்பில் மகேஷ்,நடிகர் சிவகார்த்திக்கேயன்,உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வரும் 20-ம் தேதி வெளியாக உள்ளது இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்ற ஆர்.ஜே.பாலாஜி,சமுதாயத்திற்கு தேவையான படம் இது.
ஆர்டிக்கிள் 15 படத்தின் ரீமேக் என்பது நம்ம ஊருக்கும் ரொம் ரொம்ப முக்கியம், ஜெய்பீம்,அசுரன்,பறியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் வரும் போது இல்லாத ஜாதியை திரும்பி பேசுறாங்க என்பதை பரவலாக பேசுவதை பார்க்க முடிகிறது அது உண்மை கிடையாது என்றார்.
உபியில் தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை புகார் அளிக்க சென்ற நிலையில் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
நிறைய படங்களில் ரவுடி,கொலைக்காரன்,டான்,பொறுக்கி அப்படி ஹீரோக்கள் காட்டப்படுவதை நம்ம மாஸாக பார்க்கிறோம்.
அப்போது சிவகார்த்திகேயனை பார்த்து டான் என்று நான் உங்களை சொல்லவில்லை நீங்க காலேஜ் டான் என்று கலாய்தார்.