Rajini - 169 நெல்சன் தான் இயக்குநர்.... - தில்லாக ok சொன்ன சூப்பர் ஸ்டார் - வைரலாகும் புகைப்படம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன் உட்பல பலரும் நடித்துள்ள படம் “பீஸ்ட்”. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் லாஜிக் இல்லை என்றும், விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இணையத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதனிடையே, பீஸ்ட் படம் குறித்து இயக்குநரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர், ஹீரோ கிடைத்து விட்டார் என்பதற்காக இப்படியெல்லாம் எடுக்கக்கூடாது என எஸ்.ஏ.சி கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையே, நெல்சன் ‘பீஸ்ட்’ படப்பிடிப்புக்கு இடையே ரஜினியை சந்தித்து கதை கூறி 169-வது படத்தை இயக்கும் நல்ல வாய்ப்பை பெற்றிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிரூத்தே இசையமைக்க இருக்கிறார்.
தற்போது, இப்படம் குறித்த தகவல் காணொளி வடிவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினி, படம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வைரலாக பரவியது.
இதனையடுத்து, ரஜினி நடிக்கும் படத்திற்கு இயக்குனர் மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இத்தகவலுககு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, இயக்குனரை மற்றும் எண்ணம் எதுவும் சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிக்கு இல்லையாம். இதனையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.