சூப்பர்ஸ்டார் Title...காக்கா யார்...கழுகு யார்..நெல்சன் பரபர பேட்டி
தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர்ஸ்டார் பட்டம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது அது குறித்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கருத்து தெரிவித்திருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் பட்டம்
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் ரஜினி மற்றும் விஜய் இருவரில் தற்போது யார் சூப்பர்ஸ்டார் என்ற பிரச்சனை எழுந்துள்ளது. குறிப்பாக ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் ரஜினி கழுகு காக்கா கதை கூறியதில் இருந்து அந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்க துவங்கியது.
பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருக்கும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நெல்சன் திலீப்குமார் கருத்து தெரிவித்திருக்கிறார்.
கழுகு யாரு காக்கா யாரு
“விஜயை வைத்து எப்படி அப்படி சொல்ல முடியும். அதற்கு வாய்ப்பே இல்லை. அது சிலர் வேண்டுமென்றே செய்கிறார்கள். அவர்கள் நாம் சிவப்பு சட்டை போட்டால் அதை வைத்து எதையாவது பேசுவார்கள். ஊதா பேண்ட் போட்டிருந்தால் அதை வைத்து எதையாவது சொல்வார்கள்.
இரண்டு பேருக்குமே அவ்வளவு அனுபவம் இருக்கிறது. ரஜினிகாந்த் மிக மிக நல்ல மனிதர். ரஜினிகாந்த் சார் யாரையுமே அப்படி மறைமுகமாக பேசும் ஆள் இல்லை. நீங்கள் அவரது பேச்சை ஒரு பொதுவான விஷயமாக தான் பார்க்க வேண்டும். இங்கு எதை பேசினாலும் அது குறித்து எதையாவது சொல்வார்கள். அவர்கள் பேசுவார்கள் என்று நினைத்தால் நாம் எதுவுமே சொல்ல முடியாதல்லவா? என தெரிவித்தார்.
நடிகர் விஜய் சார் நாம் ரஜினியை அவர் எப்படி நினைத்து வைத்திருக்கிறார் என்பதை தாண்டிய உயரத்தில் அவரை வைத்திருக்கிறார். விஜய்க்கு ரஜினி மெது தனியாக ஒரு அக்கறையும் உள்ளது என குறிப்பிட்ட நெல்சன், ரஜினிக்கும் விஜய் மீது தனி கவனம் இருக்கிறது என கூறினார்.