மடிந்தால் திருமாவின் மடியிலேயே மறைவேன்... - கண்கலங்கிய நெல்லை கண்ணன் - வைரல் வீடியோ
நெல்லை கண்ணன் மறைவு
‘தமிழ்க்கடல்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் (77) உடல் நலக் குறைவால் இன்று காலமானார். நெல்லை கண்ணன், தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், அரசியல்வாதியுமாக இருந்து வந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தன் இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நெல்லை கண்ணன் இன்று உயிரிழந்துள்ளார்.
காந்தி, காமராஜர் உள்ளிட்டோரின் கருத்தியல்களை தாங்கி அரசியலில் களமாடியவர். இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வைரலாகும் நெல்லை கண்ணன் வீடியோ
திருமாவளவன் மீது அதிகளவில் பாசம் வைத்தவர் நெல்லை கண்ணன்.
இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் நெல்லை கண்ணனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இந்த மேடையில் நான் மறைந்தால் திருமாவளவனின் மடியிலேயே மறைவேன் என்று தழுதழுத்த குரலில் கண்கலங்கி நெல்லை கண்ணன் பேசும்போது, திருமாவளவன் உணர்ச்சி வசப்பட்டு அழுதார்.
இதோ அந்த வீடியோ -
எழுச்சித்தமிழர் @thirumaofficial மீது அளவுக் கடந்த பாசம் வைத்த தமிழ் கடல் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் மறைந்தார்
— pranesh.v (@Pranesh1503) August 18, 2022
அய்யா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கம்....?#nellai_kannan#Rip pic.twitter.com/IXCMketmux