77வது சுதந்திர தினம் - தேசிய கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்த காந்திமதி யானை!
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் 77வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் உள்ள பூஜை முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம்.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கோவிலின் முன்பு அமைந்துள்ள விக்ட்டோரிய மகாராணி வழங்கிய விளிக்குத்தூண் அருகே தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கோவிலின் அலுவலர் ஐயர் சிவமணி கோடியை ஏற்றினார்.
கோவில் யானை மரியாதை
இதைத் தொடர்ந்து கோவில் யானையான காந்திமதி பிளிறியபடி தும்பிக்கையை தூக்கி தேசியக் கொடிக்கு மரியாதை செய்தது. பின்னர் சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விபூதி பிரசாதம் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.