முதல் கணவன் இருக்கும் போதே இரண்டாவது திருமணம் - மனைவியை கொடூரமாக கொலை செய்த முதல் கணவன்!
நெல்லையில் இரண்டாவது திருமணம் செய்த மனைவியை சரமாரி வெட்டிக்கொன்ற முதல் கணவனின் கோர செயல் அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்துகொண்ட சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா கண்ணனை பிரிந்து சென்றுவிட்டார்.
இருவீட்டாரும் எத்தனையோ முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரும் சமரசம் ஆகவே இல்லை. இந்த நிலையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்போது, தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்கிற விவசாய கூலி தொழிலாளியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கீதா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை பொன்ராஜ் வழக்கம் போல் வேலைக்காக வெளியே சென்றபோது சங்கீதா மட்டும் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார்.
அப்போதுதான் கண்ணனுக்கு சங்கீதாவின் இரண்டாவது திருமணம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. தகவலை கேட்ட கையோடு, முதல் கணவனான கண்ணன், சங்கீதாவின் வீடு தேடி சென்றுள்ளார்.
நான் இருக்கும் போது விவகாரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்ய என்ன துணிச்சல் என்று கேட்டப்படி ஆத்திரத்தில், சங்கீதாவை சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து கண்ணனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.