பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன் காலமானார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை வசந்தன் பிரபல ஜோதிடராக இருந்து வந்தார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜோதிடம் குறித்து கணிப்புகளை வெளியிட்டு வந்தார்.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வின் போதும் இவரது கணிப்புகளைக் கூறியது துல்லியமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென காலமானார். ஜோதிட கணிப்புகளால் பிரபலமான இவரின் இழப்பு ஜோதிட உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அண்மையில் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை குறித்து நெல்லை வசந்தன் கணித்திருந்தார். ஜோதிடம், ஆன்மிகம் என இரண்டிலும் பெரும் பங்காற்றிய இவர், அதுசார்ந்த பல நலதிட்ட உதவிகளை செய்துள்ளார். இதனால் மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்ற இவரின் மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல் IBC Tamil
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் முக்கிய சந்தேக நபரான சுரேஷ் படுகாயம் : வெளியான பின்னணி IBC Tamil