பள்ளி மாணவி மர்மமான முறையில் கொலை! தனிப்படைகள் அமைப்பு
குளத்தூர் அருகே 12ம் வகுப்பு பள்ளி மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் குளத்தூர் அருகே வேடநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ், விவசாயியான இவரது மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 10ம் தேதி மாலை 6 மணிக்கு காட்டுப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை, மகள் திரும்பி வராததால் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சுப்புராஜ்.
11ம் தேதி மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் மாணவியின் சடலம் கிடப்பதாக தெரியவந்தது, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்நிலையில் மாணவியை கொன்ற குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஐி சரவணன் அறிவித்துள்ளார்.
மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை விரைவாக பிடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.