நெல்லை கல்குவாரி விபத்து - உரிமையாளர் மங்களூரில் அதிரடி கைது!

By Swetha Subash May 20, 2022 02:37 PM GMT
Report

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் தினமும் வெடிபொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்கள் அள்ளும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த 14-ந் தேதி இரவில் சுமார் 400 அடி ஆழம் கொண்ட இந்த கல்குவாரியில் கற்களை அள்ளும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

நெல்லை கல்குவாரி விபத்து - உரிமையாளர் மங்களூரில் அதிரடி கைது! | Nellai Quarry Owners Arrested After Accident

இந்த சம்பவத்தின் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த செல்வகுமார்,ராஜேந்திரன்,செல்வம்,முருகன்,விஜய்,மற்றொரு முருகன், ஆகிய 6 பேர் பாளை இடிபாடுகளில் சிக்கினர்.

இந்நிலையில், தற்போது கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை கல்குவாரி விபத்து - உரிமையாளர் மங்களூரில் அதிரடி கைது! | Nellai Quarry Owners Arrested After Accident

இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டியிருந்த நிலையில் தற்போது மங்களூரில் பதுங்கியிருந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

கல்குவாரி விபத்தில் 3 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், சிக்கி உள்ள மற்றொரு நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.