பக்கோடாவில் செத்து கிடந்த பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

nellai lizard pakkoda
By Anupriyamkumaresan Oct 26, 2021 01:33 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் பிரபல லாலா கடையான ஸ்ரீராம் லாலா கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த பார்சலை வீட்டிற்கு சென்று எடுத்து பார்த்தபோது அதில் பல்லி இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதனை படம்பிடித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

பக்கோடாவில் செத்து கிடந்த பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி | Nellai Pakkoda Lizard Death Image Viral

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கடையை சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் கடையை சுத்தப்படுத்துவதுடன் பலகாரங்கள் வைக்கப்படும் இடங்களை கண்ணாடி கொண்டு மூடி பாதுகாப்பு ஏற்படுத்தும்படி அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதுவரை கடையில் பலகாரங்களை விற்பனை செய்ய கூடாது எனவும் 24 மணி நேரத்திற்கு பிறகு மறு ஆய்வு நடத்திய பிறகே கடையில் மீண்டும் விற்பனையை தொடங்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.