தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் உடல் தகனம்
நேற்று தனது இல்லத்தில் உயிரிழந்த நெல்லை கண்ணன் உடல் இன்று கருப்பன்துறையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
உடல் தகனம்
பட்டிமன்ற பேச்சாளரும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் வயது முதிர்வு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலமானார்.
காமராசர், கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் நெருங்கிய பழகியவர் நெல்லை கண்ணன்.
இவர் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் இன்று மதியம் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவரது உடல் கரும்பன்துறையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது