நெல்லை மாவட்ட எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - தமிழக அரசு அதிரடி
M K Stalin
Government of Tamil Nadu
Tirunelveli
By Thahir
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக புகார் எழுந்தது.
எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
இதை தொடர்ந்து ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி யாக இருந்த சரவணன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், நெல்லை மாவட்டத்தையும் சேர்த்து கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.