நான் கொண்டு வந்த திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லை : முதலமைச்சர் ஸ்டாலின்
திமுக கொண்டு வந்த திட்டங்கள், சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என நெல்லையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நெல்லையில் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நெல்லையில் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து உரையாற்றிய அவர், திமுக கொண்டு வந்த திட்டங்கள், சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

அதிக கல்வி நிறுவனங்கள்
அதிக கல்வி நிறுவனங்கள் முதன்முதலில் உருவானது நெல்லையில்தான் என தெரிவித்துள்ளார். மேலும், பின்தங்கிய சட்டமன்ற தொகுதி என்று எதுவும் இருக்கக் கூடாது அதனால்தான் தொகுதிக்கு 10 பிரச்சனைகளை கவனத்திற்கு கொண்டு வர சொல்லி, அத்துடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறேன் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தாமிரபரணி, கருமேணியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் 2023 க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும், இந்த திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
.
நெல்லை மாவட்டம் அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இன்று இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பொருநை அருங்காட்சியகம் நெல்லையில் அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.