சடலமாக கரை ஒதுங்கிய சிறுத்தை - என்ன நடந்தது?

nellai cheetah ambasamuthiram
By Anupriyamkumaresan Nov 30, 2021 05:23 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு பகுதி தாமிரபரணி கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பெண் சிறுத்தை சடலத்தை மீட்டு வனத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு சுடுகாட்டுப் பகுதியில் தாமிரபரணி கரையில் இறந்த நிலையில் சிறுத்தை சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சடலமாக கரை ஒதுங்கிய சிறுத்தை - என்ன நடந்தது? | Nellai Ambasamuthiram Cheetah Death Police Enquiry

இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் செண்பக ப்ரியா உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் வனச்சரக ஊழியர்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சுமார் 5 வயது பெண் சிறுத்தையின் சடலத்தை மீட்டனர்.

இதையடுத்து சிறுத்தையின் சடலத்தை தேசிய புலிகள் காப்பக ஆணைய வழிகாட்டுதலின்படி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிங்கம்பட்டி பீட் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது. சிறுத்தையும் இறப்பு குறித்து வனத் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.