தாயை கத்தியால் குத்திக்கொன்ற மனநலம் குன்றிய மகள்கள்! நிர்கதியான மகள்கள்!
நெல்லையில் பெற்ற தாயை மனநலம் பாதிக்கப்பட்ட இரு மகள்கள் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை எல்.ஜி.நகரை சேர்ந்த பிச்சை - உஷா தம்பதியினருக்கு இரண்டு மனநலம் பாதிக்கபப்ட்ட மகள்கள் உள்ளனர். பட்டப்படிப்பு முடித்துள்ள இருவரையும், உஷா வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை உஷாவின் இளைய மகள், பக்கத்து வீட்டாரிடம், தனது தாயின் உடலில் ரத்தம் வெளியேறுவதாகவும், தாய் உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உஷா உடலில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் இருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூத்த மகள் நான் தான் அம்மாவை கத்தியால் குத்தி கொன்றேன் என விடாமல் புலம்பி கொண்டே இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த 2 மனநலம் குன்றிய பெண்களையும் மீட்டு போலீசார்
காப்பகத்தில் அனுமதித்தனர்.