வேட்புமனு பரிசீலனை முடிவில் நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேர்வானவர்களின் விபரங்கள்
வேட்புமனு பரிசீலனை முடிவில் நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேர்வானவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த 40 பேரில் 24 நபர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 16 பேர் போட்டியிட தற்போது தேர்வாகி உள்ளார்கள்.
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த 32 பேரில் 19 நபர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 13 பேர் போட்டியிட தற்போது தேர்வாகி உள்ளார்கள். பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த 32 பேரில் 22 நபர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 10 பேர் போட்டியிட தற்போது தேர்வாகி உள்ளார்கள்.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த 41 பேரில் 24 நபர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 17 பேர் போட்டியிட தற்போது தேர்வாகி உள்ளார்கள்.
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த 45 பேரில் 19 நபர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 26 பேர் போட்டியிட தற்போது தேர்வாகி உள்ளார்கள்.