கத்தி பட வில்லன் அமெரிக்காவில் கைது - நம்ப மறுத்த அதிகாரிகள்
கத்தி பட நடிகர் நீல் நிதின் முகேஷ் அமெரிக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீல் நிதின் முகேஷ்
பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நீல் நிதின் முகேஷ். இவரது தாத்தா முகேஷும், தந்தை நிதின் முகேஷும் பாலிவுட்டில் பிரபல பாடகர்கள் ஆவார்கள்.
2014 ஆம் ஆண்டு, விஜய் நடிப்பில் கத்தி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நீல் நிதின் முகேஷ் அறியப்படுகிறார்.
விமான நிலையத்தில் கைது
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டது குறித்து பேசியுள்ளார். படப்பிடிப்பிற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ள அவர், பார்ப்பதற்கு இந்தியர் போல் இல்லை என கருதி, போலி பாஸ்போர்ட்டில் வந்துள்ளதாக நினைத்து நியூயார்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தன்னை பற்றி விளக்கம் கொடுக்க முயன்றும் அதை கேட்காமல் 4 மணி நேரம் அடைத்து வைத்துள்ளனர். 4 மணி நேரத்துக்குப் பிறகு, 'என்ன சொல்லப் போகிறாய்' எனக் கேட்டுள்ளனர். என்னைப் பற்றி கூகுளில் தேடிப் பாருங்கள் கூறியதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாடு கடத்தல்
அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் நுழைவதற்கான கெடுபிடி அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள்.
அமெரிக்காவில் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 18,000 பேர் பிடிபட்டுள்ள நிலையில் இன்று 205 பேர் ராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.