உங்கள் தாத்தா இருந்த இந்தியா இதுவல்ல : ராகுல்காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி
இது நேருவின் இந்தியா அல்ல என்று ராகுல் காந்தியின் கருத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாரத் ஜோடா யாத்திரை :
காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகின்றது, இந்த யாத்திரை தற்போது ராஜாஸ்தானில் நடைபெற்று வருகின்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி இந்திய சீன எல்லை குறித்து கருத்து தெரிவித்த ராகுல் சீனா முழு போருக்கு தயாராகுவதாகவும், இந்திய அரசு தூங்குவதாகவும் தெரிவித்தார். மேலும், 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா கைப்பற்றிவிட்டதாகவும்' அவர் தெரிவித்தார்.

சீனாவுடனான போர் குறித்து ராகுல்காந்தியின் கருத்துக்கு பாஜக செய்தித்தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில், சீனாவுடன் நெருக்கம் உள்ளதாக ராகுல்காந்தி உணர்கிறார். சீனா என்ன செய்யும் என்பதை அறியும் அளவிற்கு அவர் நெருக்கம் வைத்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு மற்றும் எல்லை பகுதி குறித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும், இந்திய வீரர்களின் துணிவை குறைக்கும் வகையிலும் ராகுல்காந்தி கருத்து தெரிவித்து வருகிறார்.
நேரு இந்தியா இதுவல்ல
ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தா நேருவின் இந்தியா இதுவல்ல. (1962 இந்தியா-சீனா மோதலை மேற்கோள்காட்டி) தூங்கிக்கொண்டிருந்தபோது 37 ஆயிரத்து 242 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இழந்தது யார்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து நிதி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.