வசமாக சிக்கினார் கே.என்.நேரு - பணப்பட்டுவாடாவில் ஆபாசமாக பேசிய வீடியோ வைரல்!
திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு தோல்வி பயத்தில் பணப்பட்டுவாடா செய்துள்ளார். இது தொடர்பாக ஆலோசனை நிகழ்த்தியபோது, அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சமூகவலைத்தளத்தில் வைரலாகிக்கொண்டிருக்கும் அந்த வீடியோவில், ஒவ்வொரு ஓட்டுக்கும் தலா 200 ரூபாய் கொடுக்கப்பட்டதா? என்று கே.என்.நேரு கேட்கிறார். அப்போது, அந்த அறையிலில் இருப்பவர்கள். 200 கொடுத்திட்டோம். ஆனா அவங்களெல்லாம் ரூ.500 கொடுக்குறாங்க என்று சொல்கிறார். அவன் 500 கொடுக்குறானா? அதெல்லாம் தேறாது நேரு சொல்கிறார்.
அப்போது ஒருவர், அவுங்க 500 கொடுத்தா நாமலும் 500 கொடுக்கணும்... அவுங்க 1000 கொடுத்தா நாமளும் 1000 கொடுக்கணும் என்று சொல்ல, அவன்... நக்குனா நீயும் நக்குறியா? என்று ஆபாசமாக வீடியோவில் ஆபாசமாக பேசியுள்ளார். மேலும், பணம் கொடுக்குறதுல ஏதாவது பிரச்சனை வந்தா அடிச்சு மண்டையை உடைச்சுடுவேன் என்று ஆவேசமாக திட்டியுள்ளார்.
திருச்சி போலீஸார் தபால் வாக்கு செலுத்த இருந்த நிலையில், போலீஸாருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அப்போதும், பணப்பட்டுவாடா நடைபெற்றது உறுதியானது. தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு தான் பணாப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக அ.தி.மு.க தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு பணப்பட்டுவாடா குறித்து பேசிய காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.@KN_NEHRU @arivalayam @TNelectionsCEO pic.twitter.com/jEjaCYzIos
— Vignesh (@Vigneshvidhya98) April 4, 2021
அப்போது, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த சதி திட்டம் தீட்டப்படுவதாகவும், தன் மீது களங்கம் ஏற்படுத்த அவதூறு பரப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதமும் அனுப்பி இருந்தார்.
ஆனால், இந்த வீடியோவால் தற்போது கே.என்.நேரு போலீசாரிடம் வசமான வலையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.