Saturday, May 17, 2025

கோலிக்கு அப்புறம் இவர்தான் கேப்டனா இருக்கணும் - நெஹ்ரா அதிரடி

t20cricket viratkohl nehra
By Irumporai 4 years ago
Report

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக பும்ரா இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை சற்று மோசமான துவக்கத்தை செய்தது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடமும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியிடமும் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது.

இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாகவே இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் ,விராட் கோலிக்கு அடுத்து புதிய கேப்டனாக ஒருவரை நியமிக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா தவிர கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

ரிஷப் பண்ட் பல்வேறு நாடுகளின் தொடர்களில் இருந்திருந்தாலும் தற்போது தான் அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறார். ஆகவே என்னை பொருத்தவரை  பும்ரா தான் இந்திய அணியின் கேப்டனாக வரவேண்டும் என கூறியுள்ளார்.