என் அப்பா இன்னும் தோக்கல : நீயா நானாவின் சிறப்பான சம்பவம் வைரலாகும் வீடியோ
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி கடந்த 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இதன் வெற்றிக்கு அதன் ஆங்கர் கோபிநாத்தான் முழு முதல் காரணமாக அமைந்துள்ளார்.
ஒரு கான்செப்டை எடுத்துக் கொண்டு அதன் இரு தரப்பு நியாயங்களை இவர் சிறப்பாக கொடுத்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இவர் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். அதற்கு பொதுவான சிறப்பு விருந்தினர்களையும் இந்த நிகழ்ச்சிகளில் காண முடிகிறது.
நீயா நானா
தொடர்ந்து இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் டிஆர்பியிலும் முக்கியமான நிகழ்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகள் பல நடத்தப்பட்டாலும் கோபிநாத்தின் நீயா நானா ஷோவிற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றன
அந்த வகையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் சிறப்பான தலைப்புடனேயே களமிறங்களியுள்ளது.
கணவனைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள், இந்த மாற்றத்தை ஒரு குடும்பம் எப்படி சமாளிக்கிறது என்ற தலைப்பில் இந்த வாரம் நீயா நானா ஷோ களமிறங்கியது.
இதில் தன்னுடைய குழந்தையின் பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டை படிக்காத தன்னுடைய கணவன், ஒரு மணிநேரம் எழுத்துக் கூட்டிப் படிப்பதாக அதிகம் படித்து வேலைக்கு செல்லும் மனைவி தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து பேசிய அந்த கணவர், இந்த நிகழ்ச்சியில் மனைவி ஒருவர் தன் கணவருக்கு படிக்கத்தெரியாது, மகளின் ரேங்க் கார்டை கூட அவர் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவார் என்று ஏளனமாக பேசி இருந்தார்.
இதுகுறித்த பேசிய அந்த பெண்ணின் கணவர் ‘நான் பள்ளியில் படிக்கும் போது 7 மார்க், 8 மார்க்னு வாங்குவேன், ஆனால என் மகள் 80, 90 மார்க் வாங்குவதை பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கிறது. அதனால் தான் ஒரு மணிநேரம் பார்க்கிறேன்’ என்று கூறி வெகுளியாக கூறி இருந்தார்.
என் அப்பா தோற்கவில்லை
தன் மகள் வாங்கிய மதிப்பினை ஒரு அப்பன் ஒரு மணி நேரம் பார்க்கிறானே அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அந்த பெண்ணை கோபிநாத் கேட்டதற்கு அவர் ஏ பி சி டி தான் படித்துக் கொண்டிருப்பார். அவர் இன்னும் 90ஸ்ல தான் இருக்கார் என்று கேலி செய்ய உடனே கோபிநாத் அந்த பெண்ணின் மகளை அழைத்து அவருக்கு சிறந்த அப்பா என்று பரிசையும் வழங்கினார்.
Don't gets emotional, it's just a reality show.
— தமிழ்.ஹரிஷ் (@U1_Hariz) September 11, 2022
That show~ : )
#NeeyaNaana ? pic.twitter.com/oeVOGY9bVd
மேலும், அந்த மகளிடம் உன் அப்பா இன்னும் தோற்கவில்லை என்று கூற அதற்கு அந்த மகளும் என் அப்பா தோற்கவில்லை, அவர் எனக்காக தான் கஷ்டப்படுகிறார் என்று கண்ணீர் மல்க கூறியது பலரை கண்ணீரில் ஆழ்த்தியது.
தன் மகள் இப்படி கஷ்டப்பட காரணம் நீதான்னு சபை மரியாதை கூட கொடுக்காம, எல்லா இடத்துலயும் ஒரு மனுஷன தோத்துட்ட தோத்துட்டன்னு சொன்னவனுக்கு ஒரு Complex உடைக்க உடனே ஒரு பரிச கொடுத்து தோள இறுக்கமா புடிச்சு அந்த Complexion இணையவாசிகளிடம் வைரலாகிச்வருகிறது.