“மாணவச் செல்வங்களே மீண்டும் மீண்டும் கெஞ்சி கேட்கிறேன்” - மு.க.ஸ்டாலின் நம்பிக்கை வீடியோ

tamilnadu neet mkstalin
By Irumporai Sep 15, 2021 12:03 PM GMT
Report

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என மாணவி செளந்தர்யா விரக்தியில் இருந்ததாகவும், மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.

மாணவியின் இறப்பை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோவொன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வழியாக முதல்வர், “மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.

கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்! #NEET எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்!” என தற்கொலை தடுப்பு குறித்தும், நீட் விலக்கு குறித்தும் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.