துரத்தும் நீட் .. அஞ்சும் மாணவர்கள்: நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் நீட் தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்த வண்ணம் உள்ளது.
கடந்த 5 நாட்களாக நீட் தேர்வுக்கு 3 மாணவர்கள் பலியாகியுள்ள நிலையில் , செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி அனுசியா தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி அனுசியா தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ள போது உறவினர்கள் உடனடியாக செயல்பட்டு மருத்துவமனையில் சேர்த்ததால் 40% தீக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீட் தேர்வில் தோல்வி பயம் காரணமாக மாணவி அனுசியா தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.