நீட் தேர்வு விவகாரம் ...நீதிமன்றம் செல்லும் திமுக .. ஆதரவு கொடுக்கும் அதிமுக !

DMK Exam Admk Neet நீட்தேர்வு
By Irumporai Jun 23, 2021 11:34 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (ஜூன் 23) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இதில் நீட் தேர்வு தொடர்பான விவாதம் விவாதிக்கப்பட்டது அதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தி.மு.க அரசு உறுதியாக உள்ளதாகவும். நீட் விலக்கு தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறினார்.

மேலும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற எதிர் கட்சியினர் துணை நிற்கவேண்டுமென மு.க ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்தார்.

இதற்கு பதில் கூறிய எதிர் கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசின் அணைத்து முயற்சிகளுக்கும் கண்டிப்பாக துணை நிற்போம் என கூறினார்.

நீட் தேர்வு விவகாரம் ...நீதிமன்றம் செல்லும் திமுக .. ஆதரவு கொடுக்கும் அதிமுக