இன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.
நீட் தேர்வு முடிவுகள்
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த தேர்வை தேசிய தேர்வுகளை நடத்தி வருகிறது இந்த ஆண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3570 மையங்களில் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவர்கள் எழுதினர் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்தத் தேர்வின் விடைக்குறிப்பு தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள் நகல்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது