நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். இப்போது நுழைவு தேர்வும் வேண்டாம்.. பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

modi letter stalin neet
By Irumporai Jun 05, 2021 05:14 PM GMT
Report

கொரோனா தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்ததுபோல், நீட் மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்:

கடந்த 4-ம் தேதியன்று, கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்திலும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளோம்.

இந்த முடிவு மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ள முதல்வர்.

எந்தக் காரணத்துக்காக நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வை ஒத்திவைத்திருக்கிறோமோ, அதே போல் நீட் உள்ளிட்ட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதற்கும் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

  மேலும், தமிழகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்முறைக் கல்வியிலும் மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 அடிப்படையிலேயே நடத்த அனுமதிக்க வேண்டும்.

எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து தமிழகத்துக்கு சாதகமாக முடிவெடுப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.