நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது - அமைச்சர் மா.சுப்ரமணியன்

Ma.subramanian NEET
By Petchi Avudaiappan Jun 18, 2021 10:02 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 நீட் தேர்வு தற்போது வரை நடைமுறையில் உள்ளது என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு குறித்த கேள்விகளுக்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த அவர், அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வுக்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டது.அதனுடைய தொடர்ச்சி இப்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஆனால் நீட் தேர்வுக்கான பயிற்சி தற்போது தொடங்கப்பட்டது போன்று ஓபிஎஸ் அறிக்கை விடுகிறார் என்று குற்றம்சாட்டிய மா. சுப்பிரமணியன், நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வு என்பது தற்போதுவரை நடைமுறையில் உள்ளது. அதனை ரத்துசெய்ய திமுக முயற்சித்துவருகிறது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.