நீட்தேர்வு: தமிழகத்தில் சரிந்த தேர்ச்சி சதவிகிதம்
கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.
நீட்தேர்வு
தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியிருந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 80% பேர் தோல்வியடைந்த நிலையில், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதமும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சரிந்த தேர்ச்சி
அதன்படி2020-ல் 57.44%, 2021-ல் 54.40% என்று இருந்த நிலையில், 2022-ல் 51.30% ஆக தேர்ச்சி விகிதம் சரிவு
தேர்வு எழுதிய 17,000 அரசுப்பள்ளி மாணவர்களில் 80% பேர் தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த கல்வியாண்டில் ( 2021-22 ) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாத நிலையில், 80% பேர் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.