நீட் தேர்வால் லாபம் பயிற்சி மையங்களுக்கே : அமைச்சர் பொன்முடி

M K Stalin Tamil nadu
By Irumporai May 16, 2022 05:41 AM GMT
Report

சென்னை பல்கலைக்கழக 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தரான ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

இந்த விழாவில் அரசியல், கொள்கை ரீதியாக முரண்பட்ட கருத்துக்களை பேசுவார்களா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்கள் படிக்க வேண்டும் வளரவேண்டும் என்பதுதான் தி.மு.க அரசின் நோக்கம் முதலமைச்சர் ஸ்டாலினின் விருப்பம் எனக் கூறினார்.

மேலும், உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்குவது உலகில் எங்கும் செயல்படுத்தப்படாத திட்டம் என்று கூறிய அமைச்சர் பொன்முடி நீட்விலக்கு மசோதாவை குடியசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பதாக  கூறிய அமைச்சர் பொன்முடி 

+2மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப்படிப்பு மாணவர்சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக கூறிய அமைச்சர்,நீட் நுழைவுத்தேர்வால் மாணவ,மாணவிகளுக்கு எந்த பயனும் இல்லை பயிற்சி மையங்களுக்கு மட்டுமே லாபம் கிடைப்பதாக கூறினார்.