வன்முறை எதிரொலி இன்று நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைப்பு

NEET
By Irumporai May 07, 2023 03:12 AM GMT
Report

பதட்டமான சூழ்நிலை காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. இந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இணைய சேவை முடக்கப்பட்டு, கலவரக்காரர்களை சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கியிருந்தார். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை, இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு ஒத்திவைப்பு:

தற்போது, வன்முறை மற்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இன்று நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், தேர்வுக்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய கல்வி இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்